இறைச்சிக்கோழிகளின் தீவனத்தில் ஈஸ்ட் நொதிகளை கலந்து கொடுப்பதன் மூலம் அவற்றின் உற்பத்தி திறனில் ஏற்படும் விளைவுகள்

Abstract
இறைச்சிக்கோழிகளின் தீவனத்தில் ஈஸ்ட் நொதிகளை கலந்து கொடுப்பதன் மூலம் அவற்றின் உற்பத்தி திறனில் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 288 (ஓர நாள் வயதுடைய) வென்காப்-400 இறைச்சிக்கோழி குஞ்சுகள் 4 சிகிச்சைக் குழுக்களாகவும், ஒரு சிகிச்சை குழுவிற்கு 3 மாதிரி குழுக்கள் எனவும் ஒரு மாதிரி குழுவிற்கு தலா 24 கோழிக்குஞ்சுகள் எனவும் பிரிக்கப்பட்டு 42 நாட்கள் வரை வளர்க்கப்பட்டது. கட்டுப்பாட்டு குழு 0% (குழு 1)), 0.1% (குழு 2) 0.15% (குழு 3) மற்றும் 0.2% (குழு 4) ஈஸ்ட் நொதிகள் (சாக்கிரோமைசிஸ் செரிவிசியே) அடிப்படை தீவனத்தில் கலந்து தீவனச் சிகிச்சைக் குழுக்கள் வகுக்கப்பட்டது. வாராந்திர உடல்எடை, வாராந்திர உடல்எடை சோ;திறன் போன்ற உற்பத்தித் திறன் மூலக்கூறுகள் குறித்த தரவுகள் பதிவு செய்யப்பட்டன. 0.2% ஈஸ்ட் கலந்து கொடுக்கப்பட்ட குழுவில் உள்ள இறைச்சிக்கோழிகளில் குறிப்பிடத்தக்க (P ≤ 0.01) அளவில் அதிக உடல்எடை மற்றும் உடல் எடை ஏற்றம் மற்றும் மேம்பட்ட தீவன மாற்றுத் திறனும் ஆராய்ச்சிக்காலம் (42நாட்கள்) முழுவதற்கும் கட்டுப்பாட்டுக் குழுவை விட காணப்பட்டது. இவ்வாய்வின் முடிவில் 0.23% ஈஸ்ட்(சாக்கிரோமைசிஸ் செரிவிசியே) கலந்து கொடுக்கப்பட்ட இறைச்சிக்கோழிகளில் மேம்பட்ட உற்பத்தி திறனானது காணப்பட்டது. இதை இறைச்சிக்கோழி பண்ணையாளர்கள் வியாபார கோழி குழுமங்களில் செயல்படுத்துவதின் மூலம் நல்ல இலாபத்தை பெற முடியும்.
Description
TNV_UVKMA-KU_2019_15-23
Keywords
Veterinary Science, Poultry Science
Citation