கறவை மாடுகளுக்கான தானியவகை, பயறுவகை மற்றும் மர வகை தீவனப் பயிர்கள் செயல்விளக்கம்

Loading...
Thumbnail Image
Date
2019-02
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Naam Thamizhar Pathippagam, Chennai
Abstract
சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் வட்டம், நற்புதம் கிராமத்தில் ஐந்து விவசாயிகள் வயலில் புதிய இரக தீவன பயிர்கள் முதல்நிலை செயல்விளக்கம் மூலம் கடந்த 2015-16 ஆண்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் இரண்டு ஆய்வு முறைகள் தேர்வு செய்யப்பட்டது அவைகளாவன அ1 – விவசாயிகள் பயிரிடும் சோளம் (பாரம்பரிய தொழில்நுட்பம்) அ2 – கம்பு நேப்பயிர் ஒட்டுப்புல் கோ (சிஎன்) 4 + வேலி மசால் + தீவன சோளம் (மறுதாம்பு) கோ (எப்.எஸ்) 29 + அகத்தி. இப்பரிசோதனையின் முடிவில் புதிய இரகங்களான கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் + வேலி மசால் + தீவன சோளம் (மறுதாம்பு) + அகத்தி சாகுபடி முறையானது எக்டருக்கு 163.6 டன் பசுந்தீவன மகசூல் கிடைக்கப்பெற்றது. மேலும் அதிகளவு தூர்கள், ஆண்டு முழூவதும் சத்து நிறைந்த பசுந்தீவனம் கிடைத்தது. இவ்வாறு தீவன பயிர்கள் கலந்து அளிப்பதன் மூலம் பால் உற்பத்தியும் அதிகரித்து காணப்பட்டது.
Description
TNV_UVKMA-KU_2019_698-701
Keywords
Veterinary Science, Animal Nutrition
Citation