காஞ்சிபுரம் மாவட்டத்திற்கேற்ற இலாபகரமான ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தை கண்டறிதல்

Loading...
Thumbnail Image
Date
2019-02
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Naam Thamizhar Pathippagam, Chennai
Abstract
வேளாண் பயிர்களின் நிலையான வருமானம் என்பது சமீப காலமாக நிலையற்றதாக அமைந்து வருகிறன்றது. இவற்றை நிவர்த்தி செய்து நிலையான வருமானம் கிடைத்திட பயிர் மட்டுமில்லாமல் அதனோடு வேளாண் சார்ந்த உப தொழில்களான கால்நடை வளர்ப்பையும் இணைத்து ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பது இன்றியமையாததாகும். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய பண்ணையில் திட்ட ஆராய்ச்சியானது கடந்த 2014 முதல் 2015-ம் வருடம் வரை மேற்கொள்ளப்பட்டது. ஒரு ஏக்கருக்கான சிறந்த ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தை கண்டறிவதற்காக ஐந்து ஒருங்கிணைந்த பண்ணையத் திட்ட மாதிரிகளான மேம்படுத்தப்பட்ட பயிர் திட்டத்துடன் இதர தொழில்களையும் இனைத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஆராய்ச்சி முடிவுகளின் படி, ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட பயிர் திட்டமான மக்காச்சோளத்துடன் ஊடுபயிராக தீவன தட்டைப்பயறு – நிலக்கடலை, வெண்டை - சூரியகாந்தி மற்றும் பல்லாண்டு தீவன பயிர்களான கம்பு நேப்பியர் ஒட்டுபுல் (கோ-4) + வேலிமசால் உடன் கறவை மாடு வளர்ப்பு + மண்புழு உற்பத்தி + ஜப்பானிய காடை வளர்ப்பதன் மூலம் அதிக ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தின் உற்பத்தி திறன் (10168 மற்றும் 9094 கிலோ/ஏக்கர்), அதிக நிகர வருமானம் (ரூ.2,28,855 மற்றும் ரூ.2,10,180/ஏக்கர்) மற்றும் அதிக வேலைவாய்ப்பு (392 மற்றும் 356 வேலை நாட்கள்) உருவாக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Description
TNV_UVKMA-KU_2019_529-533
Keywords
Veterinary Science, Cattle
Citation