Browsing by Author "Sankar, Patene Athul"
Now showing 1 - 1 of 1
Results Per Page
Sort Options
ArticleItem Open Access இறைச்சிக்கோழிகளின் தீவனத்தில் ஈஸ்ட் நொதிகளை கலந்து கொடுப்பதன் மூலம் அவற்றின் உற்பத்தி திறனில் ஏற்படும் விளைவுகள்(2019-02) Sankar, Patene Athul; Premavalli, K.; Omprakash, A.V.; Kirubaharan, J. John; Hudson, G.H.; TANUVASஇறைச்சிக்கோழிகளின் தீவனத்தில் ஈஸ்ட் நொதிகளை கலந்து கொடுப்பதன் மூலம் அவற்றின் உற்பத்தி திறனில் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 288 (ஓர நாள் வயதுடைய) வென்காப்-400 இறைச்சிக்கோழி குஞ்சுகள் 4 சிகிச்சைக் குழுக்களாகவும், ஒரு சிகிச்சை குழுவிற்கு 3 மாதிரி குழுக்கள் எனவும் ஒரு மாதிரி குழுவிற்கு தலா 24 கோழிக்குஞ்சுகள் எனவும் பிரிக்கப்பட்டு 42 நாட்கள் வரை வளர்க்கப்பட்டது. கட்டுப்பாட்டு குழு 0% (குழு 1)), 0.1% (குழு 2) 0.15% (குழு 3) மற்றும் 0.2% (குழு 4) ஈஸ்ட் நொதிகள் (சாக்கிரோமைசிஸ் செரிவிசியே) அடிப்படை தீவனத்தில் கலந்து தீவனச் சிகிச்சைக் குழுக்கள் வகுக்கப்பட்டது. வாராந்திர உடல்எடை, வாராந்திர உடல்எடை சோ;திறன் போன்ற உற்பத்தித் திறன் மூலக்கூறுகள் குறித்த தரவுகள் பதிவு செய்யப்பட்டன. 0.2% ஈஸ்ட் கலந்து கொடுக்கப்பட்ட குழுவில் உள்ள இறைச்சிக்கோழிகளில் குறிப்பிடத்தக்க (P ≤ 0.01) அளவில் அதிக உடல்எடை மற்றும் உடல் எடை ஏற்றம் மற்றும் மேம்பட்ட தீவன மாற்றுத் திறனும் ஆராய்ச்சிக்காலம் (42நாட்கள்) முழுவதற்கும் கட்டுப்பாட்டுக் குழுவை விட காணப்பட்டது. இவ்வாய்வின் முடிவில் 0.23% ஈஸ்ட்(சாக்கிரோமைசிஸ் செரிவிசியே) கலந்து கொடுக்கப்பட்ட இறைச்சிக்கோழிகளில் மேம்பட்ட உற்பத்தி திறனானது காணப்பட்டது. இதை இறைச்சிக்கோழி பண்ணையாளர்கள் வியாபார கோழி குழுமங்களில் செயல்படுத்துவதின் மூலம் நல்ல இலாபத்தை பெற முடியும்.