Selvam, R.TANUVAS2019-08-062019-08-062019-02http://krishikosh.egranth.ac.in/handle/1/5810119522TNV_UVKMA-KU_2019_370-374இந்த ஆராய்ச்சி கீழக்கரிசல் மற்றும் வெம்பூர் இனங்களில் டோல் போன்ற ஏற்பி மரபணுவின் ஓற்றை நியூக்ளியோடைடு பல்லுருத்தோற்றத்தின் அடிப்படையில் மரபுசார் வடிவங்களை, போட்டியால் முடிவு செய்யப்படுகிற குறிப்பிட்ட எதிருரு மரபணு பலபடியாக்கம் முறையின் மூலம் கண்டறிய மேற்க்கொள்ளப்பட்டது. கீழக்கரிசல் மற்றும் வெம்பூர் செம்மறியாடுகளிலிருந்து தாயனை பிரிக்கப்பட்டு, உண்மையான நேரத்தில் டின்ஏ பெருக்கத்தினை கண்காணிக்கும் மரபணு பலபடியாக்க கருவியில் அமைந்த எதிரு பாகுபாடு தொகுதியின் மூலம் ஓளிர்வின் ஒளிச்செறிவு அடிப்படையில் டோல் போன்ற ஏற்பி மரபணு எண் 3, 5, 6, 9 மற்றும் 10 ஆகியவற்றின் ஓற்றை நியூக்ளியோடைடு பல்லுருத்தோற்றத்தின் அடிப்படையில், மேலாதிக்க மற்றும் ஒடுங்கிய ஒத்த மரபுநிலை கொண்ட மரபுசார் வடிவம் மற்றும் கலப்பின மரபுநிலை கொண்ட மரபுசார் வடிவம் ஆகிய மூன்று மரபுசார் வடிவங்கள் கண்டறியப்பட்டன.en-USVeterinary ScienceAnimal Genetics and Breedingகால்நடைகளில் மரபுசார் வடிவத்தினை போட்டியால் முடிவு செய்யப்படுகிற குறிப்பிட்ட எதிருரு மரபணு பலபடியாக்கம் முறையின் மூலம் கண்டறிதல்உழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல், பிப்ரவரி 2019Article