கறவை மாட்டுத் தீவனத்தில் தனுவாசு தாது உப்புக் கலவையை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் - ஓர் கள ஆய்வு

Loading...
Thumbnail Image
Date
2015
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Veelan ariviyal tamil iyakkam, Newdelhi
Abstract
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கால்நடை விரிவாக்கக் கல்வித் துறை வாயிலாக "திருநெல்வேலி மாவட்ட கறவைமாடு வளர்ப்போர்களிடையே தனுவாசு தாது உப்புக் கலவையை பிரபலப்படுத்தும் திட்டம்" ஓர் ஆண்டு காலமாக செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் ஓர் பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 500 பயனாளிகளில், 30 சதவீதம் பயனாளிகள் இந்த ஆய்வுக்காக உட்படுத்தப்பட்டனர். திட்டம் செயல்படுத்தப்பட்ட பத்து கிராமங்களில் இருந்து 15 பயனாளிகள் வீதம் மொத்தம் 150 பயனாளிகள் ஆய்வுக்காக உட்படுத்தப்பட்டனர். தனுவாசு தாது உப்புக் கலவை ஒவ்வொரு பயனாளிக்கும் 2 கிலோ வீதம் மூன்று தவணையாக 6 கிலோ கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் அவர்களிடமிருந்து தாது உப்புக் கலவை கொடுப்பதற்கு முன்னும், தாது உப்புக் கலவை கொடுத்த ஒரு மாதம் முடிவில் பால் மாதிரிகள் எடுத்து சேகரிக்கப்பட்ட பாலில் கொழுப்புத் தன்மை, கொழுப்பற்றத் திடப் பொருட்கள் அளவு (SNF) மற்றும் பால் உற்பத்தி அளவு பற்றியும் ஆராயப்பட்டது. இவ்வாராய்ச்சியின் முடிவில், பால் உற்பத்தி சராசரியாக ஒரு லிட்டர் அதிகரித்தும், பாலில் உள்ள கொழுப்பற்றத் திடப்பொருள்கள் 1.45 சதவீதமும், கொழுப்பு 0.90 - 1.00 சதவீதமும் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது.
Description
Keywords
Citation